மத்திய எம்.எஸ்.எம்.இ., செயலர் தமிழகத்தில் இரு நாட்கள் ஆய்வு
மத்திய எம்.எஸ்.எம்.இ., செயலர் தமிழகத்தில் இரு நாட்கள் ஆய்வு
மத்திய எம்.எஸ்.எம்.இ., செயலர் தமிழகத்தில் இரு நாட்கள் ஆய்வு
ADDED : ஜூலை 09, 2024 10:29 PM
சென்னை:மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் எஸ்.சி.எல்.தாஸ், இரு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
அவர், கோவையில் நேற்று மாலை, 'சி டார்க்' எனப்படும், 'சயின்டிபிக் அண்டு இண்டஸ்டிரியல் டெஸ்டிக் அண்டு ரிசர்ச் சென்டர்' மையத்தை, பார்வையிட்டார். பின், தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் நிதியுதவியில் தொழில் துவங்கிய பயனாளியின் தொழிற்கூடத்திற்கு சென்று, திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சங்க பிரநிதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய செயலர் தாஸ், இன்று, திருப்பூரில் உள்ள குறு, சிறு தொழில் பிரநிதிகளை சந்தித்து, கோரிக்கைகள் குறித்து கேட்டறிய உள்ளார்.
மத்திய அரசு, பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க, மானியத்துன் கடன் வழங்குகிறது. இதேபோன்று பல திட்டங்கள் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள அத்திட்டங்கள், பயனாளிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்தும் மத்திய செயலர் தாஸ், தமிழக அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தியுள்ளார்.