காவிரி நீர் வழங்கும் காலம் துவக்கம்
காவிரி நீர் வழங்கும் காலம் துவக்கம்
காவிரி நீர் வழங்கும் காலம் துவக்கம்
ADDED : ஜூன் 01, 2024 03:43 AM
சென்னை : காவிரி நீர் வழங்கும் புதிய தவணைக்காலம் இன்று துவங்குகிறது. அதேநேரத்தில், கடந்தாண்டு நிலுவை 96 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.
கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யவில்லை. இதனால், மாத ஒதுக்கீட்டு நீரை முறைப்படி வழங்காமல் கர்நாடகா ஏமாற்றியது. காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை உத்தரவிட்டும், அதை கர்நாடகா அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. 2023 - 24ம் ஆண்டுக்கான நீர் வழங்கும் தவணைக்காலம் நேற்றுடன் முடிந்தது. புதிய தவணைக்காலம் இன்று முதல் துவங்கியுள்ளது. கடந்த நீர் வழங்கும் காலத்தில், 96 டி.எம்.சி., நீரை கர்நாடகா நிலுவை வைத்துள்ளது.