காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
UPDATED : ஜூலை 16, 2024 01:34 PM
ADDED : ஜூலை 16, 2024 11:46 AM

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க, தமிழக சட்டசபை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ., இந்திய கம்யூ., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பங்கேற்றனர். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று(ஜூலை 16) தமிழக சட்டசபை கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11:00 மணிக்கு கூட்டம் கூடியது.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., எம்.பி. வில்சன், திமுக அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ., சார்பில் கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன் பங்கேற்றனர்.
சட்டப்போராட்டம்
கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: கர்நாடக அரசின் செயல் கண்டித்தக்கது. காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடகா அரசு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. காவிரியில் உரிய நீரை திறக்காததால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றோம்.
விவசாயிகளின் உரிமை
பருவமழை சாதமகமாக இருக்கும் நிலையிலும் கர்நாடகா இப்படி செய்வதை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் திறக்க கோரி, கர்நாடகா அரசுக்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலை நாட்டும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.