பழங்குடியின பட்டியலில் குறவரை சேர்க்க வழக்கு
பழங்குடியின பட்டியலில் குறவரை சேர்க்க வழக்கு
பழங்குடியின பட்டியலில் குறவரை சேர்க்க வழக்கு
ADDED : மார் 12, 2025 05:47 AM
மதுரை: குறவர் சமூகத்தின், 27 உட்பிரிவுகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ராவணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குறவர் சமூகத்தை பற்றி இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதை தெரிவித்து, இச்சமூகத்தின், 27 உட்பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என, தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய கமிஷன் தலைவர், தமிழக தலைமை செயலர், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் கமிஷன் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஏப்., 8க்கு ஒத்திவைத்தது.