தி.மு.க.,வை சேர்ந்த பெண் பஞ்., தலைவர் மீது வழக்கு
தி.மு.க.,வை சேர்ந்த பெண் பஞ்., தலைவர் மீது வழக்கு
தி.மு.க.,வை சேர்ந்த பெண் பஞ்., தலைவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 04, 2024 01:33 AM
திருச்சி: திருச்சி அருகே போலி ரசீது மற்றும் போலி கையெழுத்திட்டு பணம் வசூலித்த பெண் பஞ்., தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி பஞ்., தலைவராக இருப்பவர் கிருத்திகா; தி.மு.க.,வை சேர்ந்தவர். இவர், சொத்து வரி வசூலுக்கு போலி ரசீது கொடுத்து பணம் வசூலித்துள்ளார்.
இதற்கு அரசு முத்திரையை போலியாக தயாரித்து பயன்படுத்தி உள்ளார். மேலும், பஞ்., அலுவலக செயலர் மற்றும் பஞ்., துணைத்தலைவர் மணிமேகலை ஆகியோரின் கையெழுத்துகளை போலியாக போட்டு வசூலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, திருப்பராய்த்துறையை சேர்ந்த முத்துராஜ், ஸ்ரீரங்கம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பஞ்., தலைவர் மீதான புகாரின்படி, வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெட்டவாய்த்தலை போலீசார், போலி ரசீது, போலி அரசு முத்திரை தயாரித்தும், போலி கையெழுத்து போட்டும் பண வசூலில் ஈடுபட்ட கிருத்திகா மீது வழக்கு பதிந்துள்ளனர்.