சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : ஜூலை 17, 2024 06:04 PM
ADDED : ஜூலை 17, 2024 01:31 PM
சென்னை: சென்னை எம்.ஆர்.சி நகர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளி நிர்வாகத்தினர் பட்டினம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இது தொடர்பாக சதீஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.