தமிழகத்தில் பா.ம.க., கூட்டணி ஆட்சி: திருமண நிகழ்வில் அன்புமணி நம்பிக்கை
தமிழகத்தில் பா.ம.க., கூட்டணி ஆட்சி: திருமண நிகழ்வில் அன்புமணி நம்பிக்கை
தமிழகத்தில் பா.ம.க., கூட்டணி ஆட்சி: திருமண நிகழ்வில் அன்புமணி நம்பிக்கை
ADDED : ஜூன் 18, 2024 06:22 AM

அரக்கோணம் : ''தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்,'' என அன்புமணி பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி உதவியாளரின் திருமணம் நேற்று நடந்தது.
மணமக்களை வாழ்த்தி அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., பணம் மற்றும் அதிகார பலத்தால் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் அது நடக்காது. 2026-ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், சேர்மன் பதவிகளை அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு சாதகமாகவே இருக்கும். இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்திற்கு 'நீட்' தேர்வு தேவையில்லாதது. சுகாதார அமைச்சராக இருந்த நான் சொல்கிறேன், இங்கு நீட் தேவையில்லை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. போலீசாருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. கலெக்டர், எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்களை கருப்பு புள்ளி பட்டியலில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.