சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 பேர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 பேர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 பேர் பலி
UPDATED : ஜூன் 29, 2024 12:08 PM
ADDED : ஜூன் 29, 2024 09:08 AM

சாத்தூர்: சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 29) ஏற்பட்ட வெடி விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல்,தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.
அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 42), நடுச் சூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (வயது 44), வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), மோகன் (வயது 50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இ.பி.எஸ்., கண்டனம்
'சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் கவலை அளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் நெறிமுறைகள் சரிவர உறுதி செய்யப்படாததே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம்'' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.