பா.ஜ., - அ.தி.மு.க., பிரிவால்தி.மு.க., கூட்டணி பெற்ற வெற்றி கூட்டிக்கழித்து கணக்கு போடும் கட்சியினர்
பா.ஜ., - அ.தி.மு.க., பிரிவால்தி.மு.க., கூட்டணி பெற்ற வெற்றி கூட்டிக்கழித்து கணக்கு போடும் கட்சியினர்
பா.ஜ., - அ.தி.மு.க., பிரிவால்தி.மு.க., கூட்டணி பெற்ற வெற்றி கூட்டிக்கழித்து கணக்கு போடும் கட்சியினர்
ADDED : ஜூன் 06, 2024 08:59 PM
திருப்பூர்:பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்திருந்தால், தமிழகத்தில் 13 தொகுதிகளில் வெற்றியும், நான்கு தொகுதிகளில் வெற்றிவாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் கட்சியினர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்திருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உலா வருகிறது. கூட்டணி அமைந்திருந்தால் 13 தொகுதிகளில் உறுதியாக வெற்றியும், நான்கு தொகுதிகளில் வெற்றிவாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள்.
உதாரணமாக, திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூ., வேட்பாளர், 41.38 சதவீதம் ஓட்டு பெற்றார். அதே சமயம் அ.தி.மு.க., 30.35 சதவீதமும், பா.ஜ., 16.22 சதவீதமும் பெற்றது. அதேபோல் கோவை தொகுதியில் தி.மு.க., 41.39 சதவீதம்; பா.ஜ., 32.79 சதவீதம். அ.தி.மு.க., 17.23 சதவீதமும் பெற்றது.சிதம்பரம் தொகுதியில், வி.சி.க., 43.28 சதவீதம் பெற்றது. அங்கு அ.தி.மு.க., 34.4; பா.ஜ.,14.44 சதவீதமும் பெற்றுள்ளது. விழுப்புரத்தில், தி.மு.க., 41.39 சதவீதமும், அ.தி.மு.க., - 35.25; பா.ஜ.,-15.78 சதவீதம் பெற்றது.
விருதுநகரில், தி.மு.க., 36.28 சதவீதம்; அ.தி.மு.க., 35.87 சதவீதம்; பா.ஜ., 15.66 சதவீதம் பெற்றது. கடலுாரில், தி.மு.க., 44.11 சதவீதம்; அ.தி.மு.க., 26.09; பா.ஜ.,19.9 சதவீதம் பெற்றது. கிருஷ்ணகிரியில் தி.மு.க., 42.27 சதவீதம்; அ.தி.மு.க., 25.76; பா.ஜ.,18.36 சதவீதம். தென்காசியில், தி.மு.க., 40.97 சதவீதம்; அ.தி.மு.க., 22.08; பா.ஜ., 20.1 சதவீதம்.நாமக்கல்லில், தி.மு.க., 40.31 சதவீதம்; அ.தி.மு.க., 37.77 சதவீதம்; பா.ஜ., 9.13 சதவீதம். சேலம் தொகுதியில் தி.மு.க., 43.38 சதவீதம்; அ.தி.மு.க., 37.77 சதவீதம்; பா.ஜ., 9.74 சதவீதம். கள்ளக்குறிச்சி - தி.மு.க., 44.94 சதவீதம்; அ.தி.மு.க., 40.64 சதவீதம்; பா.ஜ., 5.71 சதவீதம். ஆரணி - தி.மு.க., 43.86 சதவீதம்; அ.தி.மு.க., 25.55 சதவீதம்; பா.ஜ., 20.75 சதவீதம். தர்மபுரி தி.மு.க., 34,67 சதவீதம்; அ.தி.மு.க., 23.53 சதவீதம்; பா.ஜ., 32.97 சதவீதம்.
இது தவிர இக்கூட்டணி அமைந்திருந்தால், மதுரை, சிவகங்கை, கரூர் மற்றும் பொள்ளாச்சி தொகுதியிலும் கணிசமான ஓட்டுகள் கிடைத்திருக்கும்; இவற்றில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் வித்தியாசம் இந்த இரு கட்சிகளின் மொத்த ஓட்டுகளை விட மிகவும் குறைந்த அளவு தான் அதிகம். வெற்றிக்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர்.
இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் வெற்றி வாய்ப்பும், கணிசமான ஓட்டுகளும் பெற்றிருக்க முடியும் என்ற கருத்து உள்ள நிலையிலும், ஓட்டுகள் இழக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த ஓட்டுகள் ெவற்றி வாய்ப்பை குறைக்கும் அளவு இருக்காது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.