ஓட்டு எண்ணும் மையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஓட்டு எண்ணும் மையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஓட்டு எண்ணும் மையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 05, 2024 12:59 AM

கரூர்:கரூர் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாப்பாளையத்தில் உள்ள, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் எண்ணப்பட்டன.
கரூர் மாவட்ட போலீசார், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு, எஸ்.ஐ.,க்கள் தியாகராஜன், சந்திரசேகரன், மகாலட்சுமி, போலீசார் வேல் முருகன், லோகநாதன், சீதா ஆகிய எட்டு பேருக்கு, பிறந்த நாள் என தெரிய வந்தது.
அதையறிந்த கரூர் எஸ்.பி., பிரபாகர், தனித்தனியாக கேக்குகளை வரவழைத்து, போலீசாரை வெட்ட சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது, ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு பணியில் இருந்த கலெக்டர் தங்கவேலுவும், பிறந்த நாளை கொண்டாடிய போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிறகு, ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அனைத்து போலீசாருக்கும் கேக் வழங்கப்பட்டது.