தேசிய கட்டுரை போட்டி பாரதிய சிக் ஷன் மண்டல் அழைப்பு
தேசிய கட்டுரை போட்டி பாரதிய சிக் ஷன் மண்டல் அழைப்பு
தேசிய கட்டுரை போட்டி பாரதிய சிக் ஷன் மண்டல் அழைப்பு
ADDED : ஜூலை 05, 2024 02:22 AM
சென்னை:தேசிய அளவிலான ஆய்வு கட்டுரை போட்டியை, பாரதிய சிக் ஷன் மண்டல் அமைப்பு அறிவித்துள்ளது.
இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பி.எச்.டி., மாணவர்கள், 40 வயதுக்கு உட்பட்டோர் என, நான்கு பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட உள்ளது.
சட்டம், நீதி, தேசிய பாதுகாப்பு, இலக்கியம், பண்பாடு, பாரதிய ஞானமுறை, பெண்கள் மேம்பாடு குறித்த தொலைநோக்குப் பார்வை, ஊரக மேம்பாடு, சுயதொழில், வணிகவியல், பொருளாதாரம், நிர்வாகம், பாரதிய கல்வி முறை, வரலாறு, சுற்றுச்சூழல் உட்பட, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அனுப்பலாம்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதப்படலாம். 3000 முதல் 5000 வார்த்தைக்குள் இருக்க வேண்டும். சிறந்த கட்டுரையாளர், டில்லிக்கு வரவழைக்கப்பட்டு, அறிஞர்கள் முன்னிலையில் கவுரவிக்கப்படுவார். மாநில அளவில் சிறந்த கட்டுரைக்கு விருது வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை 31ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆக.31, கட்டுரை சமர்ப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களை, https://www.bsmbharat.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.