மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை
ADDED : ஜூன் 22, 2024 07:00 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்பட்டு வருகின்றன. சுருக்கமடி வலைக்கு எதிரான கிராமங்கள் ஒன்றிணைந்து இன்று கூட்டம் நடத்த இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க சீர்காழி ஆர்டிஓ. அலுவலகத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் கிராம நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி பொறுப்பு ஆர்டிஓ யுரேகா தலைமையிலும், சீர்காழி டிஎஸ்பி மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூம்புகார் தலைமையிலான சுருக்குமடி வலை பயன்படுத்தும் 10 கிராமங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வரை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் சுருக்கு மடி அடிப்படையில் பிடிக்கப்படும் மீன்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யக்கூடாது, அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் பூம்புகார் தலைமையிலான மீனவ கிராமங்களால் ஏற்படாது என முடிவு செய்யப்பட்டது.