ADDED : ஜூன் 17, 2024 12:11 AM
ஓ என் தேவதையே அஸ்பியா!
குட்டி தேவதை அஸ்பியா
மெல்லக் கேட்டாள்
“தன் சொந்த மகனை அறுத்து
பலியிட
இப்ராஹிம் நபி எப்படித்
துணிந்தார்?
பெற்ற தகப்பனின் கத்திக்கு
இஸ்மாயில் நபி எப்படி
பணிந்தார்?”
“கற்பாதைகளுக்குள் தேரைக்கு
வாழ்வளிப்பவன்
ஜில்லியன் தாய்மாரின் அன்பில்
நனைபவன்
மெய்யாலுமே உயிர்பலி
எப்படிக் கேட்பான்?
பெற்றவர் துணிந்ததும் பிள்ளை
பணிந்ததும்
ரட்சகனின் ஆணைக்காகவே
தகப்பனை சோதித்ததும்
பிள்ளையை வாதித்ததும்
தன்னிகரில்லா நபித்துவத்தை
சூட்டவே” என்றேன்
செல்ல மகளின் தலையைக்
கோதியவாறே.
நிஷா மன்சூர்