அட்டாக் பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்
அட்டாக் பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்
அட்டாக் பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்
ADDED : ஜூலை 07, 2024 04:47 AM
மதுரை: மதுரை கீரைத்துறை அட்டாக் பாண்டி. மதுரையில் ஒரு நாளிதழ்அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றக்கிளை ஆயுள் தண்டனை விதித்தது.
தி.மு.க.,நிர்வாகியாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் உள்ளார். மதுரை அனுப்பானடி பாலகிருஷ்ணன். இவருக்கு சொந்தமாக சிந்தாமணியிலுள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அட்டாக் பாண்டி உட்பட சிலர் மீது வழக்கு பதிந்தனர்.
இதில் அட்டாக் பாண்டி மதுரை (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டது. நீதிபதி முத்துலட்சுமி விசாரணையை ஒத்திவைத்தார்.