கள்ளச்சாராயம் குடித்தவர் பலி வாங்கி வந்து கொடுத்தவர் கைது திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு
கள்ளச்சாராயம் குடித்தவர் பலி வாங்கி வந்து கொடுத்தவர் கைது திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு
கள்ளச்சாராயம் குடித்தவர் பலி வாங்கி வந்து கொடுத்தவர் கைது திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:22 AM

திருவெண்ணெய்நல்லுார்:புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து கொடுத்த கொத்தனாரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், சாராயத்தை குடித்து முதியவர் நேற்று அதிகாலை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 60. கொத்தனாரான இவர், புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கொத்தனாராக வேலை செய்கிறார்.
இவரிடம் கடந்த 29ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன், 65 என்பவர், 50 ரூபாய் கொடுத்து மடுகரையில் சாராயம் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி முருகன் அன்று மாலை வேலை முடிந்ததும், மடுகரையில், ஐந்து பாக்கெட் சாராயம் வங்கி வந்துள்ளார்.
அதை அன்று இரவு முருகன், ஜெயராமன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் குடித்தனர். வீட்டிற்கு சென்ற ஜெயராமன், மறுநாள் 30ம் தேதி காலை படுக்கையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், '108 ஆம்புலன்ஸ்' மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார், முருகன் மற்றும் சிவசந்திரனை பிடித்து விசாரித்தனர். அப்போது, முருகன் தான் மடுகரைக்கு சென்ற போது
தொடர்ச்சி 7ம் பக்கம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள், மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி, மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார் என, செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டன. அ.தி.மு.க., சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பின்னும் தி.மு.க., அரசு அதை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே, இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கண்ட பின்னும், எந்த பாடமும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லையா? தி.மு.க., அரசு கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விழிப்பதற்குள், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?
- பழனிசாமி
அ.தி.மு.க., பொதுச்செயலர்