ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு
ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு
ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு
ADDED : மார் 14, 2025 12:12 AM
சென்னை:'இன்று முதல் 'ஆரோக்யா' பால் விலை, லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தப்படுகிறது' என, ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் சார்பில், பால் முகவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
இன்று முதல், ஆரோக்யா பால் விற்பனை விலை, லிட்டருக்கு 4 ரூபாய், தயிர் 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
அதாவது, அரை லிட்டர் 'புல் கிரீம் பால்' 38 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், 1 லிட்டர் 'புல் கிரீம் கேபிள் டாப்' பால் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், அரை லிட்டர் திடப்படுத்தப்பட்ட பால், 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும் உயர்கிறது.
அதேபோல், 400 கிராம் அளவுள்ள தயிர் 32 ரூபாயில் இருந்து, 33 ரூபாயாக உயர்கிறது.
பால் மற்றும் மோர் பாக்கெட் அளவுகளில், 125 மி.லி., 120 மி.லி., ஆகவும், 180 மி.லி., 160 மி.லி., ஆகவும், 200 மி.லி., 180 மி.லி., ஆகவும் குறைக்கப்பட்டு, புதிய அளவில் விற்பனைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.