இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
ADDED : மார் 14, 2025 12:42 AM
சென்னை:இசை அமைப்பாளர் இளையராஜாவின் அரை நுாற்றாண்டு கால திரைஇசைப் பயணத்தை, அரசு சார்பில் கொண்டாட முடிவெடுத்து உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்து, சென்னை திரும்பியபோது, தமிழக அரசு சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இளையராஜா நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலினை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளித்ததற்காக, நன்றி தெரிவித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
லண்டனில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இளையராஜாவின் அரை நுாற்றாண்டு கால திரையிசை பயனணத்தை, அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு, இந்த விழா சிறக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.