Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இன்ஜி., கல்லுாரியில் நேரடி 2ம் ஆண்டு  சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்  

இன்ஜி., கல்லுாரியில் நேரடி 2ம் ஆண்டு  சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்  

இன்ஜி., கல்லுாரியில் நேரடி 2ம் ஆண்டு  சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்  

இன்ஜி., கல்லுாரியில் நேரடி 2ம் ஆண்டு  சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்  

ADDED : ஜூன் 07, 2024 07:40 PM


Google News
சிவகங்கை:இன்ஜி., கல்லுாரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையை காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி நடத்துகிறது. இதற்கு டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., குறிப்பிட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம்.

பதிவு கட்டணம் 300 ரூபாய் இணைய தளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக செலுத்த முடியாதவர்கள், The secretary, second year B.E/B.Tec Degree Admissions - 2024 - 25, ACGCET, karaikudi என்ற முகவரிக்கு காரைக்குடியில் செலுத்த தக்க வகையில் வங்கி வரைவோலை சமர்ப்பிக்கலாம்.

எஸ்.சி., மற்றும் எஸ்.சி., ஏ / எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். மேலும் விபரத்திற்கு www.tnlea.com இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லுாரியை 04565 - 224535 என்ற எண்ணில் அழைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us