விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
ADDED : ஜூன் 02, 2024 01:03 AM
சென்னை:கடந்த மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை கால நீதிமன்றங்களில், சவுக்கு சங்கர் கைதுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, மே 23ல் பணி ஓய்வு பெற்றார். பின், மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், கடந்த வாரம் பொறுப்பேற்றதும், முதலாவது கோர்ட் ஹாலுக்கு வந்து, நீதிபதி ஆதிகேசவலு உடன் அமர்ந்து, கோவில்கள் தொடர்பான வழக்குகளை, விடுமுறை காலத்தில் விசாரித்தார்.
ஒரு மாதத்துக்கும் மேலான கோடை விடுமுறை இன்றுடன் முடிந்து, நாளை உயர் நீதிமன்றம் திறக்கிறது.
விடுமுறை கால அமர்வில், நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, குமரேஷ்பாபு, கலைமதி, ஆஷா, சக்திவேல், செந்தில்குமார், சுவாமிநாதன், சரவணன், பாலாஜி, சத்யநாராயண பிரசாத், சவுந்தர், லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் வழக்குகளை விசாரித்தனர்.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை, ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக விசாரணைக்கு எடுத்த வழக்கு.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட கோரிய வழக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள், இந்த மாதத்தில் விசாரணைக்கு வருகின்றன.