சாக்கடையில் சங்கமித்த சக்கரம் அரசு பஸ்சில் தொடரும் அவலம்
சாக்கடையில் சங்கமித்த சக்கரம் அரசு பஸ்சில் தொடரும் அவலம்
சாக்கடையில் சங்கமித்த சக்கரம் அரசு பஸ்சில் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 04, 2024 12:10 AM

ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து நேற்று காலை தீர்த்தகவுண்டன்வலசுக்கு பயணியருடன் புறப்பட்ட அரசு டவுன் பஸ், வேப்பன்வலசு அருகே சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. சுதாரித்த டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் பயணியர் தப்பினர்.
தமிழகத்தில் சென்னை தவிர்த்து, பிற நகரங்களில் ஓடும் அரசு பஸ்களில் பெரும்பாலானவை, மோசமான நிலையில் லொட லொட பஸ்களாகவே வலம் வருகின்றன. இவற்றில் பயணிக்கும் மக்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இந்நிலையில், பழனியிலிருந்து தீர்த்தகவுண்டன்வலசு கிராமத்திற்கு நேற்று காலை 9:40 மணிக்கு பயணியருடன் டவுன் பஸ் புறப்பட்டது. டிரைவர் நீதிபாண்டியன், 54, என்பவர் ஓட்டினார். ஆயக்குடி அமரபூண்டி வழியாக வேப்பன்வலசு அருகே வரும்போது, பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்றோடி, சாலையோர சாக்கடையில் விழுந்தது. பஸ்சில் இருந்த பயணியர் அலறினர்.
சுதாரித்த டிரைவர் பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தினார். பயணியரோ, 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்; பின்னர் அவ்வழியாக வந்த வேறு பஸ்சில் ஏறி சென்றனர்.