பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை:உ.பி. வாலிபர்கள் கைது
பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை:உ.பி. வாலிபர்கள் கைது
பொறியாளர் வீட்டில் 60 பவுன் கொள்ளை:உ.பி. வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 10, 2024 08:31 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் பொறியாளர் ரமேஷ் வீட்டில் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகை ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 9 பவுனை மீட்டுள்ளனர்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொறியாளர் ரமேஷ். இவர் சென்னை தனியார் வங்கியில் பணியாற்றும் மகளின் திருமணத்திற்காக 60 பவுன் நகை வாங்கி தன் வீட்டில் வைத்திருந்தார். இவர் குடும்பத்தோடு ஜூன் 22ல் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தன் அண்ணன் வீட்டிற்கு சென்றார். மீண்டும் அடுத்த நாள் காலை மீண்டும் தன் வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 பவுன் நகை ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
எஸ்.பி.,பிரதீப்,மேற்கு இன்ஸ்பெக்டர்சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநில வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதுதெரிந்தது. கிரைம் டீம் எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை பிடிக்க உத்தரபிரதேசம் சென்றனர்.போலீசார் 15 நாட்களாக அங்கு பதுங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் பயன்படுத்திய அலைபேசியை பின்தொடர்ந்துசென்றனர். நேற்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த சித்தேந்தர்35,மனோஜ்குமார்28 ஆகியோரை போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 9 பவுன் நகையை மீட்டனர்.
விசாரணையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விஜய்,என்ற வாலிபர்திண்டுக்கல்லுக்கு வந்து துணிகள் விற்பது போல் வீட்டின் அடையாளத்தை கொள்ளையர்களுக்கு காண்பித்து மூளையாக செயல்பட்டதுதெரிந்தது. போலீசார் அவரையும் தேடுகின்றனர்.