விபத்தில் 6 பேர் பலி: டிரைவர் உரிமம் ரத்து
விபத்தில் 6 பேர் பலி: டிரைவர் உரிமம் ரத்து
விபத்தில் 6 பேர் பலி: டிரைவர் உரிமம் ரத்து
ADDED : ஜூன் 17, 2024 12:30 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு, வாழவந்திபுதுாரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 34; தனியார் பஸ் டிரைவர். மே 30ல் ஏற்காட்டில் பயணியரை ஏற்றிக்கொண்டு வந்தபோது, 13வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 100 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இதில், சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்ட பயணியர் படுகாயம் அடைந்தனர். அதனால், டிரைவரின் லைசென்ஸ், பஸ்சின் தகுதி சான்றிதழ், அனுமதி சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில், ஏற்கனவே பஸ்சை அதிவேகத்தில் இயக்கியதால், ஜனார்த்தனனின் டிரைவிங் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு முன் தற்காலிகமாக ரத்து செய்திருப்பது தெரிந்தது. அதன் பிறகும் அவர் பஸ்சை வேகமாக இயக்கி, ஆறு பேர் பலியாக காரணமாக இருந்துள்ளார்.
இதனால், அவரது லைசென்சை ஐந்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து, சேலம் கிழக்கு கோட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.