ADDED : மார் 12, 2025 12:09 AM
சென்னை: திருவண்ணாமலை மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., ரத்தினகுமார், ஈரோடு மாவட்டம் பவானிக்கும்; கோவை மாவட்டம், வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி, அதே மாவட்டத்தில், போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கும்; ஈரோடு மாவட்டம், பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், நீலகிரி மாவட்ட மனித உரிமைகள் பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., பவித்ரா, கோவை மாவட்டம் வால்பாறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்பட டி.எஸ்.பி.,க்கள் ஆறு பேரை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.