பெரியாறு அணை உடையும் என உளறியவருக்கு கிடைத்த 4,437
பெரியாறு அணை உடையும் என உளறியவருக்கு கிடைத்த 4,437
பெரியாறு அணை உடையும் என உளறியவருக்கு கிடைத்த 4,437
ADDED : ஜூன் 06, 2024 12:12 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தவர் ரசல்ஜோய். இவர், 'சேவ் கேரளா' என்ற முழக்கத்தை முன்வைத்து அமைப்பை துவக்கி, 100க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசி, அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்.
இவர், இடுக்கி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக இருந்தார். கேரள மக்களிடம் பெரியாறு அணை விஷயத்தில் மிகவும் பிரபலமான இவர் வாங்கிய மொத்த ஓட்டுகள் 4,437 மட்டுமே.
இந்த தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த ஓட்டுகள் 9,519. நோட்டாவை விட குறைந்த ஓட்டுகள் வாங்கிய இவரை, இடுக்கி மாவட்ட மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதன் வாயிலாக நிரூபணம் ஆகியுள்ளது.