விஜய கரிசல்குளத்தில் இன்று 3 ம் கட்ட அகழாய்வு துவக்கம்
விஜய கரிசல்குளத்தில் இன்று 3 ம் கட்ட அகழாய்வு துவக்கம்
விஜய கரிசல்குளத்தில் இன்று 3 ம் கட்ட அகழாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 18, 2024 12:20 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை காணொலி காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார்.
விஜய கரிசல்குளத்தில் அகழாய்வு பணிக்காக தொல்லியல் மேடு என்ற உச்சி மேடு என பெயரிடப்பட்டு 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்ட அகழாய்வு பணி நடந்தது. அதில் 2 ஏக்கரில் 16 குழிகளில் 3254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
அடுத்ததாக 2023 ஏப். 6 ல் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் பணிகள் துவங்கியது. இதில் 3 ஏக்கரில் 18 குழிகளில் 4660 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இப்பணி 2023 அக்.19ல் முடிவடைந்த நிலையில் இரண்டு கட்ட அகழாய்விலும் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்கு ஏற்கனவே நடந்த இடத்திற்கு அருகே கிழக்குப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பணிகள் துவங்கப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அகழாய்வு பணியை துவக்கி வைக்கிறார்.
தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ' முதல்வர் காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அகழாய்வு பணிகள் நடைபெறும் என்றார்.