ADDED : ஜூலை 07, 2024 02:07 AM

நடப்பாண்டில், உள்நாட்டி லிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், 32 கோடி சுற்றுலா பயணியர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். மாநில சுற்றுலாத்துறை வாயிலாக, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா தலங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசிடம், 170 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. நிதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதிகள் மேம்படுத்தப்படும்.