லஞ்ச செயல் அலுவலர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
லஞ்ச செயல் அலுவலர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
லஞ்ச செயல் அலுவலர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 06, 2024 09:24 PM
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அனிஷ் நகரைச் சேர்ந்தவர் அம்ஜத் அலி, 55. இவருக்கு புதிய வீடு கட்ட அனுமதி வாங்குவதற்காக அவரின் உறவினர்கள் முகமது இப்ராம்ஷா, 41, நைனா முகமது, 40, ஆகியோர் தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கத்தை அணுகினர். அவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
நைனா முகமது புகார்படி, ஜூலை 4ல் பேரூராட்சி அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றும் தற்காலிக பணியாளர் தொண்டிராஜ், 33, என்பவரிடம் நைனா முகமது, 20,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தபோது, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், செயல் அலுவலர் மகாலிங்கம், 55, இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன், 51, ஆகியோரையும் கைது செய்தனர். செயல் அலுவலர் உட்பட மூன்று பேரையும் 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார்.