இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2024 01:21 AM

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 80 மூடை பீடி இலை பண்டல்களுடன், மினிலாரி, காரை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் ஐந்து ஏக்கர் கடற்கரைப்பகுதியில் நேற்று அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார், மினி லாரி நின்றிருந்தன. போலீசார் மற்றும் நுண்ணறிவு போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகனங்களை சோதனையிட வந்தனர்.
அப்போது மினி லாரியில் இருந்து பீடி இலை பண்டல்களை இறக்கி நாட்டுப் படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 20க்கு மேற்பட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கார், மினி லாரி டிரைவர்கள் துாத்துக்குடி பொன்ராஜ் 44, மதுரை உசிலம்பட்டி காமு 52 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
80 மூடைகளில் 3700 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தபோலீசார் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.