ADDED : மார் 07, 2026 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது அருந்தாதீர்
தைலம் ஷர்ரி என்ற தோழர் நபிகள் நாயகத்திடம், ''நாங்கள் குளிர் பிரதேசத்தில் வாழ்கிறோம். குளிர் தாங்க முடியவில்லை. அதைப் போக்க மது அருந்துகிறோம்'' என்றார்.
''நீங்கள் சாப்பிடும் மதுவில் போதை இருக்கிறதா'' ''ஆம்'' ''அப்படியானால். அதைக் குடிக்காதீர்கள்'' ''தங்களுக்கு கட்டுப்பட்டு இனி நான் மதுவைத் தொட மாட்டேன். ஆனால் மக்கள் இதைக் கேட்க மாட்டார்களே'' ''அப்படியானால் அவர்களை எதிர்த்து நீங்கள் போரிடுங்கள்'' என்றார்.
இதே போல ஒருமுறை நாயகத்தை சந்திக்க வந்த ஒருவர் அன்பளிப்பாக மதுவைக் கொடுத்தார்.
உடனே அவர், ''இறைவன் மதுவைத் தடை செய்திருப்பது தெரியாதா'' எனக் கேட்டார்.
''இல்லை'' என சொல்லி விட்டு அருகில் இருந்தவரிடம் ரகசியமாக பேசினார் அந்த நபர்.
இதை கவனித்த நாயகம், ''ரகசியமாக என்ன சொன்னீர்கள்'' எனக் கேட்டார்.
''அதை விற்கச் சொன்னேன்'' என்றார்.
''அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்'' என்றார் வேகமாக. உடனே தோல் பையைத் திறந்து விட, அதில் நிரம்பியிருந்த மது மண்ணில் வழிந்தது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:58 மணி


