ADDED : மே 14, 2025 07:33 AM
காரியாபட்டி; காரியாபட்டி கணக்கனேந்தலில் சுயம்பு புத்துக்கோயிலில் சித்திரை மாத பவுர்ணமி, சித்திர குப்தரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை, 501 திரு விளக்கு பூஜை நடந்தது.
நாகம்மாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சித்ரா பவுர்ணமி முழு நிலவிற்கு சிறப்பு ஆராதனை கட்டப்பட்டது. காரியாபட்டி, ராமநாதபுரம், மதுரை, சிவகாசி, விருதுநகர், கமுதி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.