ADDED : அக் 19, 2025 09:33 PM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக பாதவியல் தின கருத்தரங்கு டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் அடிப்படையில் நீரிழிவு நோயாளிகளின் கால்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்து நிபு ணர்கள் கூறினர்.
இந்திய பாதவியல் துறையின் தலைவர் சுரி, நிருபன் சக்கரவர்த்தி பேசினர். மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அன்புவேல் பங்கேற்றார்.


