ADDED : ஜூலை 03, 2025 03:10 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம்தவிர்தான் கிராமத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி 29, அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 21, கூலி தொழிலாளி.
இவர் 2023ல் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த வீரலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். வன்னியம்பட்டி போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம்அபராதம் விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்முத்துகிருஷ்ணன் ஆஜரானார்.