/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலையில் வெடி விபத்துதொழிலாளி பலி: போர்மேன் கைது பட்டாசு ஆலையில் வெடி விபத்துதொழிலாளி பலி: போர்மேன் கைது
பட்டாசு ஆலையில் வெடி விபத்துதொழிலாளி பலி: போர்மேன் கைது
பட்டாசு ஆலையில் வெடி விபத்துதொழிலாளி பலி: போர்மேன் கைது
பட்டாசு ஆலையில் வெடி விபத்துதொழிலாளி பலி: போர்மேன் கைது
ADDED : ஜூன் 08, 2025 01:34 AM

விருதுநகர்:விருதுநகர் அருகே அரசகுடும்பம்பட்டியில் சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் நேற்று மதியம் நடந்த வெடி விபத்தில் குல்லுார் சந்தையைச் சேர்ந்த தொழிலாளி சங்கிலி 45, பலியானார். இதில் போர்மேன் சாந்தகுமார் 33, கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் கனகபிரபு, முருகவேல். இவர்களுக்கு சொந்தமான சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற நாக்பூர் லைசென்ஸ் பெற்ற பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை 32 அறைகளுடன் அரசகுடும்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 2:00 மணிக்கு புஸ்வானம் பட்டாசு தயாரிக்கும் அறையில் உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்ட குல்லுார் சந்தையைச் சேர்ந்த தொழிலாளி சங்கிலி என்பவர் படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மாலை பலியானார்.
இச்சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கனகபிரபு, முருகவேல், போர்மேன் சாந்தகுமார் மீது வழக்கு பதிந்தனர். இதில் சாந்தகுமார் கைது செய்யப்பட்டார்.