/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டூவீலர் - கார் மோதி பெண் பலி ;கணவர், குழந்தை காயம் டூவீலர் - கார் மோதி பெண் பலி ;கணவர், குழந்தை காயம்
டூவீலர் - கார் மோதி பெண் பலி ;கணவர், குழந்தை காயம்
டூவீலர் - கார் மோதி பெண் பலி ;கணவர், குழந்தை காயம்
டூவீலர் - கார் மோதி பெண் பலி ;கணவர், குழந்தை காயம்
ADDED : செப் 16, 2025 12:20 AM

சாத்துார்; துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செட்டிகுறிச்சியைச் சேர்ந்தவர் மேசியார் தாஸ் 31. இவர் மனைவி வனிதா, குழந்தை சஞ்சனா 2.
இவர்கள் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.சாத்துார் -- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே பின்னால் அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் வனிதா சம்பவ இடத்தில் பலியானார். கணவரும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் டிரைவர் திருநெல்வேலி பொன் போத்தியை 34, கைது செய்து சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.