/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கலெக்டர் அலுவலக பாலம் வருமா: ஏக்கத்தில் மக்கள் மண் பரிசோதனை முடிந்தும் பணிகள் துவங்காத நிலைகலெக்டர் அலுவலக பாலம் வருமா: ஏக்கத்தில் மக்கள் மண் பரிசோதனை முடிந்தும் பணிகள் துவங்காத நிலை
கலெக்டர் அலுவலக பாலம் வருமா: ஏக்கத்தில் மக்கள் மண் பரிசோதனை முடிந்தும் பணிகள் துவங்காத நிலை
கலெக்டர் அலுவலக பாலம் வருமா: ஏக்கத்தில் மக்கள் மண் பரிசோதனை முடிந்தும் பணிகள் துவங்காத நிலை
கலெக்டர் அலுவலக பாலம் வருமா: ஏக்கத்தில் மக்கள் மண் பரிசோதனை முடிந்தும் பணிகள் துவங்காத நிலை
ADDED : ஜன 06, 2024 05:12 AM

விருதுநகர்: விருதுநகரில் கலெக்டர் அலுவலக பாலம் அமைப்பதற்கு மண் பரிசோதனை செய்து ஒரு ஆண்டு, 10 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் துவங்காத நிலை உள்ளது. இதனால் தினசரி போக்குவரத்து நெரிசலில் அல்லாடும் மக்கள், அரசு ஊழியர்கள் எப்போது பாலம் அமையும் என ஏக்கத்தில் உள்ளனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு வழிச்சாலை உள்ளது. இதை கடக்க தினசரி அரசு ஊழியர்கள், மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பும், சாத்துார் படந்தால் விலக்கு நான்குவழிச்சாலையிலும் பாலம் அமைக்க 2009ல் திட்டமிடப்பட்டது.
அதற்கு பின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் 2021 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஒவ்வொரு குறைதீர் நாள் அன்றும் அதிகளவில் மக்கள் வரும் போது விபத்து அபாயம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.
இந்நிலையில் 2021ல் தி.மு.க., பொறுப்பேற்றதும் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சாத்துார் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகம் முன் விரைவில் பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதன் பின் 2022 மார்ச்சில் மண் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லிக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டன. அடுத்தப்படியாக பால வடிவமைப்பு, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 6 மாதமாக பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஒப்புதல் இப்போது வந்து விடும், விரைவில் வந்து விடும் என கூறிக் கொண்டே இருந்தனர். தற்போது ஓராண்டு 10 மாதங்கள் கடந்தும் தற்போது வரை கட்டுமான பணிகள் துவங்காமல் உள்ளனர். எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எதுவும் தெரியாத சூழல் உள்ளது.
இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தால் கலெக்டர் அலுவலகம் சென்று வரும் அரசு ஊழியர்கள், மக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து செல்வோர், போலீசார் என பலரும் பயன்பெறுவர்.
ஆனால் தற்போது நெருக்கடியான சூழல் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் உள்ளோரும் இதே வழியை தான் பயன்படுத்துகின்றனர்.
மேலும் நான்கு வழிச்சாலையில் கடப்பதற்காக போட்டிருந்த பாதுகாப்பு கோடுகளும் அழிந்து விட்டன. இதனால் நிறுத்தத்திற்கு நிற்க வரும் பஸ்கள் டூவீலர் மீது மோதும் அபாயமும் உள்ளன. இந்த நான்கு வழிச்சாலையை கடப்பதிலும் லாரிகள், மினிலாரிகள், கார்கள் விதி மீறும் போது பாதசாரிகளாக உள்ளோர் விபத்தை சந்திக்கின்றனர்.
இப்பணியை துவங்குவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏன் தாமதம் செய்கிறது என தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகளான இரண்டு அமைச்சர்களும் இதில் தலையிட்டு நிரந்த தீர்வு காண வேண்டும்.
கவனம் சிதறினால்...
மக்கள், அரசு ஊழியர்கள் நலன் கருதி விரைவில் பால பணிகளை துவக்க வேண்டும். கவனம் சிதறினால் ஆபத்து தான். பாலம் அமைந்தால் வணிக போக்குவரத்துக்கு தங்கு தடையின்றி செல்லும் நல்ல வழித்தடமாகவும் இந்த நான்கு வழிச்சாலை மாறும்.
-கண்ணன் நாகராஜன்
தலைவர், விஜயபாரத வணிக கூட்டமைப்பு
விருதுநகர்
அச்சத்தில் ஊழியர்கள்
இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. அரசு ஊழியர்கள் அச்சத்தோடு பணிக்கு வந்து செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. நிரந்தர தீர்வு வேண்டும்.
-க.வேல்முருகன்
சமூக ஆர்வலர், விருதுநகர்
விரைவில் துவங்கும்
திட்ட வரைவு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.
-நாகராஜ், திட்ட இயக்குனர்தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை
தீர்வு