ADDED : மே 26, 2025 02:02 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த 4 பேரை பிடித்து வனத்துறையினர் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
தெற்கு வெங்காநல்லுார் விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ராஜபாளையம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் தெற்கு நங்கநல்லுார் தனியார் தோட்டத்தில் காட்டுப்பன்றி இறைச்சி பதுக்கி வைத்திருந்த கருப்பையா 35, மயில்வாகனன் 40, முத்துசாமி 30, குருசாமி 43, ஆகிய நான்கு பேரிடமிருந்து இரண்டு காட்டுப் பன்றிகளின் இறைச்சி பறிமுதல் செய்த வனத்துறையினர் நான்கு பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.