/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிக்னல் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஆறு ஆண்டுகளாக அவலம் சிக்னல் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஆறு ஆண்டுகளாக அவலம்
சிக்னல் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஆறு ஆண்டுகளாக அவலம்
சிக்னல் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஆறு ஆண்டுகளாக அவலம்
சிக்னல் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஆறு ஆண்டுகளாக அவலம்
ADDED : செப் 15, 2025 05:54 AM
விருதுநகர் : விருதுநகர் எம்.ஜி.ஆர்.,சிலை பகுதியில் அமைந்துள்ள சிக்னல்கள் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு நான்கு ரோடுகளின் சந்திப்பிலும் சிக்னல் செயல்படுத்தப்பட்டது. அதே போல் இங்குள்ள புறக்காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் டிராபிக் போலீஸ் போக்குவரத்தை கட்டுப்படுத்துவார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சிக்னல் செயல்படாமல் உள்ளது.
இதனால் நான்கு திசைகளில் வரும் வாகனங்களும் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதால் குறுக்கும் நெடுக்குமாக பாய்கின்றன. இந்த நெரிசலில் முதியவர்கள், பெண்கள் சிக்கினால் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். பணியில் இருக்க வேண்டிய டிராபிக் போலீசும் அவ்வப்போது இங்கு இல்லாத நிலை இருப்பதால் வாகன ஓட்டிகள் அலட்சியம் தொடர்கிறது.
இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஒவ்வொரு முறையும், சரி செய்து விடுவதாக உறுதி அளித்தாலும், அப்படியே விட்டு விடுகின்றனர். புதிய சிக்னல்களை நிறுவி போக்குவரத்து நெரிசலையும், விதிமீறல்களை கட்டுப்படுத்தி விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.