ADDED : மார் 26, 2025 01:55 AM
விருதுநகர்:கல்குவாரியில் இயந்திர ஆப்பரேட்டராக இருந்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு 24, தகராறில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாட்ச்மேன் கருப்பசாமிக்கு 67, ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர் விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்ட திருப்பதி புளூ மெட்டலில் இயந்திர ஆப்பரேட்டராக பணியாற்றினார். இங்கு வாட்ச்மேனாக சென்னல்குடியைச் சேர்ந்த கருப்பசாமி பணிபுரிந்தார்.இருவருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்னை முற்றியதால் 2020 செப். 7ல் வீட்டின் மாடியில் இருந்த விஷ்ணுவை, சுத்தியலால் தாக்கி கருப்பசாமி கொலை செய்தார்.
வச்சக்காரப்பட்டி போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனை ரூ. 6500 அபராதம் விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி., ஹேமானந்த குமார் தீர்ப்பளித்தார்.