/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்
ADDED : மார் 17, 2025 05:24 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோடுகளில் தேங்கும் கழிவு நீரால் மக்கள், வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் இருபுறங்களிலும் உணவகங்கள், பழச்சாறு, டீக்கடைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து தினமும் அதிகப்படியான கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆனால் சில கடைகள் மட்டுமே ரோடு ஓரத்தில் உள்ள வடிகாலில் கழிவு நீர் சென்று சேரும் வகையில் அமைப்பு வைத்துள்ளன. பெரும்பாலான கடைகளில் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்பு இல்லை. மேலும் உணவகங்களின் பாத்திரங்களை வெளிப்பகுதியில் வைத்து சுத்தம் செய்கின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீர் சர்வீஸ் ரோடு ஓரத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து புகார் எழும் போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ரோடு ஓரத்தில் கடைகள் வைத்துள்ளோர் எவ்வித அக்கறையும் இன்றி செயல்படுவது தொடர் கதையாக மாறியுள்ளது.
எனவே சர்வீஸ் ரோடு ஓரங்களில் கழிவு நீர் வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இனி வரும் காலங்களிலும் கழிவு நீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.