/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 35 செ.மீ., துடைப்பம் கைப்பிடி அறுவை சிகிச்சையில் அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவமனை சாதனை 35 செ.மீ., துடைப்பம் கைப்பிடி அறுவை சிகிச்சையில் அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவமனை சாதனை
35 செ.மீ., துடைப்பம் கைப்பிடி அறுவை சிகிச்சையில் அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவமனை சாதனை
35 செ.மீ., துடைப்பம் கைப்பிடி அறுவை சிகிச்சையில் அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவமனை சாதனை
35 செ.மீ., துடைப்பம் கைப்பிடி அறுவை சிகிச்சையில் அகற்றம் விருதுநகர் அரசு மருத்துவமனை சாதனை
ADDED : ஜூன் 10, 2025 12:54 AM
விருதுநகர்: 55 வயதுடைய ஒருவரின் மலத்துவாரத்தில் இருந்த 35 செ.மீ., நீளமான பிளாஸ்டிக் துடைப்பத்தின் கைப்பிடியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி விருதுநகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் நான்கு நாட்களாக மலம் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்பட்ட போது அடிவயிற்றில் பிளாஸ்டிக் துடைப்ப கைப்பிடி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து டீன் ஜெயசிங் தலைமையில் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் அமலன், நோயாளியின் மலக்குடல், நெளி பெருங்குடலில் சிக்கியிருந்த 35 செ.மீ., நீளமுள்ள பிளாஸ்டிக் துடைப்பத்தின் கைப்பிடியை அகற்றினார்.
மேலும் அறுவை சிகிச்சை நிபுணர் வரதீஸ்வரி, மயக்க மருந்து துறைத் தலைவர் சேகர், டாக்டர் சரிதா, செவிலியர் மகாலட்சுமி, ஊழியர்கள் அடங்கிய குழு நோயாளியின் மலக்குடலில் ஏற்பட்ட கிழிவை தைத்து சிகிச்சை அளித்தனர்.