/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 31, 2025 01:15 AM
விருதுநகர்: ''தமிழகத்தில் பணிபுரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை மாநில அரசு வழங்க வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.ரவி வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 100 என்ற மிக குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறது. தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.19 ஆயிரம் அடிப்படை தொகை வாங்கும் நிலைக்கு தகுதியாக உள்ளோம். கிராமங்களில் பணிகளையும் செய்யும் கிராம உதவியாளர்களுக்கு தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
இதுகுறித்து மாநில அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கைகளை வைத்து வருகிறோம். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காரணம் காட்டி எங்களுக்கு கொடுத்தால் அவர்கள் கேட்பர் எனக்கூறி இது அரசு கொள்கை முடிவு என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
மேலும் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதும் தாமதமாகிறது. அதற்கும் மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.