/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு தொழிலாளி நினைவு சிலை திறப்பு பட்டாசு தொழிலாளி நினைவு சிலை திறப்பு
பட்டாசு தொழிலாளி நினைவு சிலை திறப்பு
பட்டாசு தொழிலாளி நினைவு சிலை திறப்பு
பட்டாசு தொழிலாளி நினைவு சிலை திறப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:09 AM

சிவகாசி: சிவகாசி காரனேசன் சந்திப்பில் பட்டாசு தொழிலாளியின் உழைப்பை பிரதிபலிக்கும் வகையில் ரூ. 29 லட்சத்தில் அமைக்கப்பட்ட நினைவு சிலை திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு தொழிலாளர் நினைவு சிலை, சிவகாசி அறிவுசார் மையத்தில் காமிக்ஸ் நுாலகம், சிவகாசி அரசு கலைக் கல்லுாரியில் கலையரங்கம் ஆகியவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். .
பின்னர் அமைச்சர் பேசுகையில்: சிவகாசியில் அடையாளமான பட்டாசு தொழிலாளர்களை போற்றும் வகையில் நகரின் நுழைவு வாயிலில் சிலை திறக்கப்பட்டு உள்ளது. தொழிலில் மட்டுமல்ல கல்வியிலும் சிவகாசி முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு குறித்து கல்லுாரிகளில் பாடப்பிரிவும், பல்கலை கழகங்களில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.
,மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.