/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம் திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்
திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்
திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்
திறக்கப்படாத திருமண மண்டபம், வாரச்சந்தையால் சிரமம்
நடைபாதையை தூய்மைப்படுத்த வேண்டும்
வெள்ளைச்சாமி, விவசாயி: ஊருணியில் ரூ. பல லட்சம் செலவு செய்து நடைபாதை அமைக்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் யாரும் நடக்க முடியவில்லை. புதர் மண்டி விஷ பூச்சிகள் அடைந்து வருகிறது. திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மைப்படுத்தி, விளக்குகள் பொருத்தி, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சந்தையால் இடையூறு
குமார், விவசாயி: சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கறிகளை ரோட்டில் போட்டு விற்பனை செய்வதால் பொருட்கள் வாங்க குறுக்கு நெடுக்குமாக மக்கள் நடந்து செல்லும் போது விபத்து நடக்கிறது. பொருட்கள் வாங்க வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, தனியாக இடம் ஒதுக்கி சந்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
செயல்படாத திருமண மண்டபம்
மணி, தனியார் ஊழியர்: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மூடப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஏழை எளிய மக்கள் விசேஷங்கள் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.