ADDED : செப் 10, 2025 08:10 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 47, காரிச்சேரியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 45.
இவர்கள் இருவரும் வாய்ப்பூட்டான்பட்டியில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அறையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்தனர். தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையில் அலுவலர்கள், போலீசார் சோதனையில் கண்டறிந்தனர். சூலக்கரை போலீசார் மாணிக்கம், கருப்பசாமியை கைது செய்தனர்.