/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்களில் இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்களில் இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு
ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்களில் இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு
ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்களில் இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு
ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்களில் இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு
ADDED : மே 15, 2025 12:39 AM
ராஜபாளையம்; ராஜபாளையம் வழியே செல்லும் செங்கோட்டை- -மயிலாடுதுறை, மதுரை-- செங்கோட்டை ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை--மயிலாடுதுறை (16848/16847) எக்ஸ்பிரஸ் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் மயிலாடுதுறை-திண்டுக்கல், மதுரை--செங்கோட்டை பயணிகள் ரயில் 16 பெட்டிகளாக நடைமுறையில் இருந்து வந்த நிலையில் 2022ம் ஆண்டு ஒரே ரயிலாக மாற்றி 12 பெட்டிகளுடன் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் பயணிகள் கூட்டம் அதிகரித்த நிலையில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் சார்பில் இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து மே 26 முதல் செங்கோட்டை--மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மே 25 முதல் மதுரை--செங்கோட்டை (56719/56720) பயணிகள்ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைத்து மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் பயணிகள் தினமும் நிரம்பி வழியும் கூட்டத்தில் இருக்கை வசதிக்கு நெருக்கி அடித்து பயணித்து வந்த நிலை சரியாகும் என ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.