ADDED : செப் 20, 2025 03:41 AM

மதுரை: மதுரையில் என்.எம்.ஆர்., சுப்புராம் மகளிர் கல்லுாரியில் மாநில அளவிலான கம்ப்யூட்டர் அறிவியல் துறை மாணவிகளுக்கு இடையிலான பல்திறன் போட்டிகள் நடந்தன.
இதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி டேட்டா சயின்ஸ் மாணவிகள் பங்கேற்றனர். புதையல் வேட்டை (ட்ரஷர் ஹண்ட்) போட்டியில் மாணவிகள் யோகலட்சுமி, விஜயலட்சுமி, பிரியங்கா, பிரேமா முதலிடம் பெற்றனர். விளம்பரப்பிரிவு போட்டியில் மாணவிகள் யுவஸ்ரீ, ஜோதிகா, நிவேதா, கனிகாஸ்ரீ, ஷாமிலி, அபிதா ஆகியோர் 2ம் பரிசு பெற்றனர்.