/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஊரக விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களுக்கு பாராமுகம் மழைக்கு முன் தேவை நடவடிக்கை ஊரக விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களுக்கு பாராமுகம் மழைக்கு முன் தேவை நடவடிக்கை
ஊரக விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களுக்கு பாராமுகம் மழைக்கு முன் தேவை நடவடிக்கை
ஊரக விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களுக்கு பாராமுகம் மழைக்கு முன் தேவை நடவடிக்கை
ஊரக விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களுக்கு பாராமுகம் மழைக்கு முன் தேவை நடவடிக்கை
ADDED : செப் 15, 2025 05:48 AM

விருதுநகர்: விருதுநகரின் ஊரக விளைநிலங்களில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை நேராக்க தொடர்ந்து மின் வாரியத்தினர் பாராமுகம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் பலர் இலவச மின்சாரம் கோரி காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில் விளைநிலங்களில் சாய்ந்துள்ள மின்கம்பங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விருதுநகரில் பெரும்பாலான விளைநிலங்கள் சதுப்பு, கரிசல் கலவையாக உள்ளதால், களிமண் தன்மை அதிகம் உண்டு. நீரோட்டம் ஏற்படும் பட்சத்தில் மண் இறுகாமல் இருக்கும். இது விவசாயத்திற்கு நல்லது. ஆனால் அதன் வழியாக செல்லும் மின்கம்பங்களுக்கு நல்லதில்லை.
இதனால் மின்கம்பங்களை அடிக்கடி கண்காணிப்பது அவசியமாகிறது. ஆனால் தற்போது கேட்பாரில்லை என்ற நிலை உள்ளது. மின்வாரியம் விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து செவிசாய்ப்பதில்லை. விருதுநகர் ஊரக பகுதிகளில் இது போன்று மின்கம்பங்கள் சாய்ந்த விளைநிலங்கள் அதிகம் உள்ளதை காண முடிகிறது.
மின் ஊழியர் பற்றாக்குறையை காரணம் கூறி, பலர் செய்ய முடிந்த பணிகளையும் புறக்கணிக்கின்றனர். மின்கம்பம் சரிவு என்றால், கோட்ட அலுவலகத்தில் இருந்து கனரக வாகனங்களை வரவழைக்க வேண்டும் என்பதால் விட்டு விடுகின்றனர். ஆனால் இந்த மின்கம்பங்கள் சரியும் போது சில கிராமங்களின் பாதையையும் துண்டிக்கிறது. தரிசு நிலங்களில் சரிந்தால் யாரும் கேட்க ஆளில்லை என வயரை துண்டித்து விடுவர். எனவே ஊரக பகுதிகளில் விளைநிலங்களில் கம்பம் சரிந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும்.