ADDED : மே 18, 2025 12:07 AM
சாத்துார்: சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் சுரேஷ் 46, டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வந்த இவர் மனைவி மாரி லட்சுமி 44, மகள் முத்து முகிலா 15, டூவீலரில் பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு பெரிய ஓடைப்பட்டி விலக்கில் டூவீலர் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.