/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாயலேரியில் 2 மாதமாக குடிநீர் இல்லை மாயலேரியில் 2 மாதமாக குடிநீர் இல்லை
மாயலேரியில் 2 மாதமாக குடிநீர் இல்லை
மாயலேரியில் 2 மாதமாக குடிநீர் இல்லை
மாயலேரியில் 2 மாதமாக குடிநீர் இல்லை
ADDED : செப் 02, 2025 05:39 AM
நரிக்குடி : நரிக்குடி மாயலேரியில் இரு மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லை. அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லாததால் மக்கள் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நரிக்குடி மாயலேரியில் பல மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இந்நிலையில் 2 மாதங்களாக முற்றிலும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஒன்றிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதால் பெரிதும் சிரமப்படுகின்றனர். அத்துடன் புழக்கத்திற்கான தண்ணீரும் சப்ளை இல்லை. அருகில் உள்ள கண்மாயிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் காலி குடங்களுடன் நரிக்குடி பார்த்திபனூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர் செல்பவர்கள் என பலரும் செல்ல முடியாமல் தவித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு, நரிக்குடி இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.