/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மரங்களால் சோலைவனமாக மாறிய சாலை விருதுநகர் பாத்திமா நகர் மக்கள் அசத்தல் மரங்களால் சோலைவனமாக மாறிய சாலை விருதுநகர் பாத்திமா நகர் மக்கள் அசத்தல்
மரங்களால் சோலைவனமாக மாறிய சாலை விருதுநகர் பாத்திமா நகர் மக்கள் அசத்தல்
மரங்களால் சோலைவனமாக மாறிய சாலை விருதுநகர் பாத்திமா நகர் மக்கள் அசத்தல்
மரங்களால் சோலைவனமாக மாறிய சாலை விருதுநகர் பாத்திமா நகர் மக்கள் அசத்தல்
ADDED : செப் 15, 2025 03:56 AM

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் ரோடுகளின் விரிவாக்கமும் அவசியமாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரங்கள் நிறைந்து காணப்பட்டது. தற்போது மாநில நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத்தால் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு இயற்கை எழில் பாழாகும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நிறைந்து இருக்கும் என்பதால்பள்ளி, கல்லுாரிகள், தெருக்களில் பெய்யும் மழையை நிலத்தடி நீராக சேமித்து வைக்க மரங்கள் அவசியம். மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய மரங்கள் வளர்ப்பும் தேவையான ஒன்று.
இந்நிலையில் விருதுநகர் பாத்திமா நகரில் ஆற்றுப்பாலம் பஸ் ஸ்டாப் முதல் சாத்துார் ரோடு இணையும் ரோடு வரை இருபுறமும் முன்னாள் கவுன்சிலர் பாண்டியால் மரங்கள் நடவு ஆரம்பத்தில் செய்யப்பட்டது. அதன் பின் கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வேப்பமரம், அரசமரம், புங்கை, கொடிக்காய், அரசமரம், கொய்யா, பப்பாளி, நாவல் மரம் உள்பட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரித்து வளர்க்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வீடுகளின் முன் மரம் வளர்க்க விரும்புபவர்கள் கேட்கும் மரத்தை மக்களுக்கு கொடுத்து தற்போது ரோட்டின் இருபுறமும் சோலை வனமாக மாற்றியுள்ளனர். இதனால் விருதுநகரில் எங்கும் இல்லாத அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாக பாத்திமா நகர் உள்ளது. இதனால் பாத்திமா நகர் பகுதி நகர்பகுதியில் ஒரு சோலையாக பல ஆண்டுகளாக உள்ளது.